உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கூட்டுறவு தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு

கூட்டுறவு தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு

ஈரோடு, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப, மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் கடந்த ஆக.,௬ம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதற்கான எழுத்துத் தேர்வு வரும், ௧௧ம் தேதி நடக்கவுள்ளது.திண்டல் வேளாளர் மகளிர் கலை கல்லுாரி, வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இதற்கான தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஈரோடு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் www.drberd.inஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு jrerd.gmail.comமற்றும் 0424-2-211378 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை ஈரோடு மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் மற்றும் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய தலைவர் கந்தராஜா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி