உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலையில் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் ஆலோசனை

சென்னிமலையில் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் ஆலோசனை

சென்னிமலையில் கைத்தறி நெசவுதொழிலாளர்கள் ஆலோசனைசென்னிமலை, நவ. 7-ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவு தொழிலாளர் ஏ.ஐ.டி.யு.சி., சங்கத்தின், சென்னிமலை ஒன்றிய ஆலோசனை கூட்டம், சென்னிமலையில் ஒன்றிய தலைவர் கண்ணுசாமி தலைமையில், மாவட்ட துணை செயலாளர் நாகப்பன் முன்னிலையில் நடந்தது. மாவட்ட தலைவர் சித்தையன், பொதுச் செயலாளர் வரதராஜன், பொருளாளர் பொன்னுசாமி ஆகியோர் பேசினர். கூட்டத்தில், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில், நெசவு கூலியை ரொக்கமாக வழங்க வேண்டும். ஓராண்டு காலமாக வழங்கப்படாமல் உள்ள, தள்ளுபடி மானிய பாக்கியை நிபந்தனையின்றி உடனடியாக வழங்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகளாக திருத்தி அமைக்கப்படாமல் உள்ள, நெசவாளர்களின் அடிப்படை கூலியை உயர்த்தி திருத்தி அமைக்க வேண்டும். கைத்தறி ஜவுளிகளுக்கு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 12ல், ஈரோடு கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ