கைத்தறி நெசவுத் தொழிலாளர் சென்னிமலையில் ஆர்ப்பாட்டம்
சென்னிமலை:ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்கம் ஏ.ஐ.டி.யு.சி., சார்பில், சென்னிமலையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கண்ணுச்சாமி தலைமை வகித்தார். ஆக.,5ம் தேதி தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் கைத்தறி தொழிலை பாதுகாக்க, மானிய விலையில் கச்சா பொருட்கள் வழங்க வேண்டும். 1994ல் நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை கூலியை உயர்த்தி ஆண்டுதோறும் பஞ்சப்படி வழங்க வேண்டும். 60 வயதான தொழிலாளர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை, 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் நெசவுத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.