உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் சாரல் மழை

ஈரோட்டில் சாரல் மழை

ஈரோடு:ஈரோட்டில் நேற்று காலை வழக்கம் போல், வெயிலின் தாக்கம் இருந்தது. இந்நிலையில் மாலை 5:00 மணிக்கு வானம் மேக மூட்டமாக மாறி குளிர் காற்று வீசத் துவங்கியது. அதனை தொடர்ந்து 6:00 மணிக்கு மிதமான வேகத்தில் சாரல் மழை பெய்ய துவங்கியது. இந்த மழையானது கன மழையாக மாறும் என அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இரவு 7:15 மணியை கடந்தும் சாரல் மழையே பெய்தது. இருந்தபோதிலும் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை உருவானது. இதனால்பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ