கோபியில் சாரல் மழை
கோபி:கோபி மற்றும் சுற்று வட்டார பகுதியில், வெயில் வாட்டி வதைத்தது. மாலை 5:00 மணி முதல், 5:30 மணி வரை, கோபி பஸ் ஸ்டாண்ட், புதுப்பாளையம், நாயக்கன்காடு, கரட்டூர், குள்ளம்பாளையம். வெள்ளாபாளையம், நாதிபாளையம் உள்ளிட்ட பகுதியில் சாரல் மழை பெய்தது.இதேபோல் சிறுவலுார், வெள்ளாங்கோவில், கடுக்காம்பாளையம், கொளப்பலுார் உள்ளிட்ட பகுதியில் மாலை, 4:30 மணி முதல், ஒரு மணி நேரம் சாரல் மழை பெய்தது.* அந்தியூரில் மாலை, 4:30 மணிக்கு கனமழை பெய்தது. ஆனால் சிறிது நேரத்தில் நின்று விட்டது. அதேசமயம் மைக்கேல்பாளையம், சங்கராப்பாளையம், பிரம்மதேசம், பச்சாம்பாளையத்தில் அரை மணி நேரத்துக்கும் மேலாக துாறல் மழை பெய்தது.பருவாச்சி, செம்புளிச்சாம்பாளையம், அம்மன்பாளையம் ஆகிய இடங்களில், 10 நிமிடத்துக்கும் மேல் கனமழை பெய்தது.