கனரக வாகனங்கள் பர்கூர் மலை பாதை வழியாக அனுமதி
அந்தியூர், அந்தியூரிலிருந்து பர் கூர் வழியாக கர்நாடகா செல்லும் கனரக வாகனங்கள், தமிழக-கர்நாடக மாநில எல்லையான கர்கேகண்டி-நால்ரோடு வரையிலான சாலை அமைக்கும் பணியால் தடை செய்யப்பட்டது. இதனால் கடந்த மாதம், 22ம் தேதி மாலையிலிருந்து, அந்தியூர் வரட்டுப்பள்ளம் செக்போஸ்ட் வழியாக சென்ற கனரக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. சாலைப்பணி முடிந்த நிலையில், 15 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை முதல், பர்கூர் மலைப்பாதை வழியாக கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.