உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தடையின்றி குடிநீர் வழங்க உயர்மட்ட குழுவில் உத்தரவு

தடையின்றி குடிநீர் வழங்க உயர்மட்ட குழுவில் உத்தரவு

ஈரோடு: ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்டக்குழு கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார்.பல்வேறு துறைகள் சார்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்ப-ணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சத்தியமங்கலம், அந்தியூர் யூனியனுக்கு உட்பட்ட மலை கிராமங்களுக்கு மண் சாலை அமைப்பது, பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டத்தில் வசதி செய்து கொடுத்தல், பிறப்பு - இறப்பு பதிவில் தாய், தந்தையின் ஆதார் விபரங்களை இணைப்பது, மக்-களை தேடி மருத்துவ திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்-களை நிரப்புவது, தாளவாடி மலைப்பகுதியில் கான்கிரீட் சாலை, பாதுகாப்பான கம்பி மின் வேலை அமைப்பது குறித்தும் அதிகாரி-களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. கோடை வருவதால், பாதுகாப்பான குடிநீர், தடையின்றி வழங்க நடவடிக்கைக்கு உத்த-ரவிடப்பட்டது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார், மாவட்ட திட்ட இயக்-குனர் பிரியா, ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன், கலெக்டரின் நேர்-முக உதவியாளர் (பொது) தேன்மொழி உட்பட பலர் பங்கேற்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ