உயர் கல்வி வழிகாட்டி கண்காட்சி ஏற்பாடு
ஈரோடு, ஈரோடு மாவட்ட அரசு மாதிரி பள்ளி, பெருந்துறை பழனிசாமி கலைக்கல்லுாரி வளாகத்தில் அமைந்துள்ளது. இங்கு இன்று முதல், 15ம் தேதி வரை அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவ, மாணவியருக்கான உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடக்க உள்ளது. அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 15ம் தேதி காலை, 9:00 மணிக்கு கலெக்டர் கந்தசாமி, மாணவர்கள், மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் கலந்துரையாட உள்ளார். இத்தகவலை சி.இ.ஓ., சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.