பதவி உயர்வு கேட்டு ஹெச்.எம்.,கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு: தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்தினர், ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் புருசோத்தமன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் வேலுச்சாமி முன்னிலை வகித்தனர். தமிழகம் முழுவதும் பணியாற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களை விசாரணை ஏதுமின்றி பணியிடை நீக்கம் செய்வதையும், பணிமாறுதல் செய்வதையும் கைவிட வேண்டும்.மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மட்டும் எவ்வித பதவி உயர்வும் வழங்கப்படாமல் புறக்கணித்து வருவது கண்டிக்கதக்கது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.