உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓடையில் துரித செயல்பாட்டால் மழைநீரில் இருந்து தப்பிய வீடுகள்

ஓடையில் துரித செயல்பாட்டால் மழைநீரில் இருந்து தப்பிய வீடுகள்

ஈரோடு: ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில், பல்வேறு பகுதி சாக்கடை நீரும், மழை காலங்களில் மழை நீரும் பெருக்கெடுத்து ஓடும். ஓடையில் பல்வேறு இடங்களில் குப்பை, கழிவுகள், கட்டட கழிவை கொட்டுவதால், பல இடங்களில் ஓடை மேடு, பள்ளமாகி விட்டது. இதனால் மழை நீர் விரைவாக, சீராக ஓடாமல், கரையோர வீடுகள், தாழ்வான தெரு, வீடுகளுக்குள் செல்வது வாடிக்கை.குறிப்பாக அன்னை சத்யா நகர், மல்லி நகர் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர். மாநகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி வருகின்றனர். தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால், அதிக பாதிப்புக்குள்ளாகும் பிச்சைக்காரன் பள்ளம் ஓடையை கண்காணிக்க, கமிஷனர் அர்பித் ஜெயின் அறிவுறுத்தியிருந்தார். இதற்காக குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பெய்த மழையால், பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது குப்பை, கழிவு மற்றும் கட்டுமான கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் தேங்கியது. மாநகராட்சி ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் சீரமைத்தனர். இதனால் கரையோர குடியிருப்புகளில் மழைநீர் புகுவது தவிர்க்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை