வீட்டு வசதி திட்ட முகாம்: 215 பயனாளிகள் மனு
கோபி, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற, சொந்த வீடில்லாத தொழிலாளர்களுக்கு, வீட்டு மனை வைத்திருந்தால், அவர்களாகவே நான்கு லட்சம் ரூபாய் மானியமாக பெற்று வீடு கட்டிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அல்லது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில், பங்கு தொகையாக நிதி உதவி வழங்கப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் தொழிலாளர் துறை சார்பில், அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம் சிறப்பு முகாம், கோபி தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது.நாதிபாளையத்தில், 528, கொளப்பலுாரில், 112, அக்கரை கொடிவேரி, 256, ஒடையாக்கவுண்டம்பாளையம், 384, அரக்கன்கோட்டை, 692, பெருமுகையில், 144 என மொத்தம், 2,408 அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. நேற்று நடந்த முகாமில், 215 பேர் மனு கொடுத்தனர். மனுக்களின் ஆவணங்களின் அடிப்படையில், தகுதியுள்ள பயனாளிகளை தேர்வு செய்து தொழிலாளர் நலத்துறை மூலம், இவர்களுக்கு நிதியுதவி கிடைக்க வழிவகை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.