மேலும் செய்திகள்
கூடுதல் விநாயகர் சிலை அமைக்க கோரி மனு
22-Jul-2025
ஈரோடு, விநாயகர் சதுர்த்தி ஆக., 27ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி களிமண், கிழ ங்கு மாவு உள்ளிட்டவற்றால் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.ஈரோடு, ஸ்ரீ சித்தி விநாயகர் சிற்ப கலை கூடத்தை சேர்ந்த வெங்கடாசலம் கூறியதாவது: கடலை மாவு, ஸ்டார்ச் மாவு, குச்சி கிழங்கு மாவில் விநாயகர் சிலைகளை அரை அடி முதல், 10 அடி உயரம் வரை செய்கிறோம். நீரில் எளிதில் கரையும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத, ரசாயனம் கலக்காத வண்ணங்களை விநாயகர் சிலைக்கு பயன்படுத்துகிறோம். 10 பேர் விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். விநாயகர் சிலைகள், ரூ.100 முதல், 18 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.ஆர்டரின் பேரில் பெரிய சைஸ் விநாயகர் சிலைகள் செய்கிறோம். 10, 8, 6, 5 அடிகளில் சிலைகள் தயாராக விற்பனைக்கு உள்ளன. 2,3 மற்றும் அரை அடி விநாயகர் சிலைகள் ஏராளமாக உள்ளன. 10 அடி விநாயகர் சிலை செய்ய, 20 கிலோ ஸ்டார்ச், 20 கிலோ குச்சி கிழங்கு மாவு தேவைப்படும். தற்போது விநாயகர் சிலை விற்பனை சுமாராக உள்ளது. சதுர்த்தியை எதிர்பார்த்து விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. சதுர்த்திக்கு சில தினங்கள் முன்னதாக, அதிகளவில் சிலைகள் விற்பனையாகும். இவ்வாறு கூறினார்.
22-Jul-2025