உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பணமாலை அணிந்தும், விதவைக்கோலம் பூண்டும் மனுத்தாக்கலுக்கு வந்த சுயேட்சை வேட்பாளர்கள்

பணமாலை அணிந்தும், விதவைக்கோலம் பூண்டும் மனுத்தாக்கலுக்கு வந்த சுயேட்சை வேட்பாளர்கள்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மனுத்தாக்கல் செய்ய, பணமாலை அணிந்தும், விதவை கோலம் பூண்டும் வேட்பாளர்கள் வித்தியாசமான 'கெட்-அப்'களில் வந்தனர்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கடந்த, 10ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம், சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்ய நுார்முகம்மது என்ற வேட்பாளர், இடுகாட்டுக்கு செல்-பவர் போல, தீச்சட்டி, சங்கு, பால், சேகண்டி அடித்து வந்தார். இறுதிநாளான நேற்றும் பல வேட்பாளர்கள், தங்களை பலரும் கவனிக்க வேண்டும் என்பதற்காக, வித்தியாச வேடமிட்டு வந்து மனுத்தாக்கல் செய்தனர்.* அகில இந்திய ஊழல் தடுப்பு கூட்டமைப்பு தலைவர் அக்னி ஆழ்வார், கழுத்தில் பணமாலை அணிந்து வந்தார். பணமா-லையை கழற்றி விட்டு செல்லும்படி போலீசார் தடுத்தனர். அதன்-படியே செய்தார். அவர், 50,000 ரூபாய் மதிப்பில், 500, 200, 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுக்களை மாலையாக அணிந்தி-ருந்தார். தவிர டெபாசிட் தொகை, 10,000 ரூபாய் செலுத்த, 10, 5, 2, 1 ரூபாய் நாணயம் கொடுத்தார்.* பெருந்துறை, நிச்சாம்பாளையம் விவசாயி பிரபாகரன், டெபாசிட் தொகைக்கான தொகை, 5,000 ரூபாயில், 3,500 ரூபாயை நாணயங்களாகவும், மீதி தொகையை பணமாக கொண்டு வந்திருந்தார்.* தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க மாநில தலைவர் செல்லபாண்டியன், விதவை கோலத்தில் வெள்ளை புடவை கட்டி மனுத்தாக்கல் செய்து கூறுகையில், ''தமிழகத்தில் மது குடித்து ஆண்கள் இறப்பதால், பல பெண்கள் விதவையாக உள்ளனர். எனவே தமிழகத்தில் மதுவை தடை செய்ய வேண்டும். அதை வலியுறுத்தி விதவைக்கோலம் பூண்டு வந்தேன்,'' என்றார்.* அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழக மாநில தலைவர் ரவி, வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவருடன் அக்கட்சி நிறுவனர் சக்கரவர்த்தி என்பவர், எம்.ஜி.ஆர்., போல் வேஷம் போட்டு வந்திருந்தார்.* திருவாரூர் மாவட்டம் குடவாசலை சேர்ந்த திருமலைசாமி, எம்மதமும் சம்மதம் என்பதை வலியுறுத்தி, சாமியார் போல காவி வேட்டி, தலையில் இஸ்லாமியர் அணியும் குல்லா, கழுத்தில் ருத்ராட்ச மாலை, சிலுவை அணிந்து வந்து மனுத்-தாக்கல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை