உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உயரம் குறைந்த மாற்றுத்திறனாளி சான்று, உரிமை வழங்க வலியுறுத்தல்

உயரம் குறைந்த மாற்றுத்திறனாளி சான்று, உரிமை வழங்க வலியுறுத்தல்

ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் செயலர் மாரிமுத்து தலைமையில் மனு வழங்கி கூறியதாவது:மத்திய அரசு சமீபத்தில், 147 செ.மீ.,க்கும் கீழாக உயரம் குறைந்தவர்களும், ஊனமுற்றோருக்கான அரசு சான்று வழங்க வேண்டும் என சட்டம் கொண்டு வந்துள்ளது.இவர்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகளுக்கான மற்ற அனைத்து உரிமைகளும் வழங்க வேண்டும். தமிழகத்தில், 50,000க்கும் மேற்பட்ட உயரம் வளர்ச்சி தடைபட்ட மாற்றுத்திறனாளிகள் இருக்க வாய்ப்புள்ளது. கிராமப்புறங்களில் அதிகமாக உள்ளனர்.மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள சான்று பல மாவட்டங்களில் முறையாக வழங்குவதில்லை. ஊனத்தின் சதவீதத்தை குறைத்து சான்றளிப்பதால், உதவித்தொகை, உரிமைகள் கிடைப்பதில்லை. இவர்களது வாழ்வாதாரம் பாதிக்கிறது. போக்குவரத்து, வீடுகள், கழிப்பிடங்கள் போன்ற அடிப்படை தேவை வசதிகள் கூட இவர்களுக்கு ஏற்ப இல்லை.திருமணம் பாதிக்கிறது. இதுபோன்றோருக்கு தனித்துவ பாதுகாப்பு வழங்க அரசு முன்வர வேண்டும். வீடு இல்லாத உயர வளர்ச்சி தடைபட்டோர் உள்ள குடும்பங்களுக்கு சிறப்பு வசதிகளுடன் திட்டம் தீட்டி, வீடு கட்டித்தர வேண்டும். அரசு உள்ளிட்ட பணிகளில் இவர்களுக்கு ஏற்ப சிறப்பு வேலைவாய்ப்புகளை கண்டறிந்து வழங்க வேண்டும்.இவ்வாறு கூரினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை