பிறப்பு, இறப்பு சான்றிதழ் கேட்டவர்களிடம் விசாரணை
கோபி: கோபி கோட்டத்தின் ஆறு தாலுகாக்களை சேர்ந்த, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் கோரியவர்களிடம், கோபி ஆர்.டி.ஓ., ஆபீசில் நேற்று விசாரணை நடந்தது. சப்-கலெக்டர் சிவானந்தம் விசாரணை செய்தார். இறப்பு சான்றிதழ் கோரியவர்களிடம், வாரிசு மற்றும் இரு சாட்சியினரிடம் விசாரணை நடந்தது. இந்த வகையில், 40 பேரிடம விசாரணை செய்தார். இதேபோல் முதியோர் பாதுகாப்பு சட்டத்தில், ஆதரவின்றி கைவிடப்பட்ட முதியவர்களிடம், நேற்று முன்தினம் விசாரணை செய்தார். அதன்-படி பத்து பேரிடம் விசாரித்து, அவர்களின் வாரிசுகளிடம் இருந்து பராமரிப்பு உதவித்தொகை கிடைக்க வழி வகை செய்ததாக, அதி-காரிகள் தெரிவித்தனர்.