உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அ.தி.மு.க., தோல்விக்கு யார் காரணம் செங்கோட்டையன் வீட்டில் முன்னாள் நிர்வாகிகளின் பேட்டி

அ.தி.மு.க., தோல்விக்கு யார் காரணம் செங்கோட்டையன் வீட்டில் முன்னாள் நிர்வாகிகளின் பேட்டி

கோபி, கடந்த சட்டசபை தேர்தலில் அந்தியூர் தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் தோல்வியடைந்ததற்கு, செங்கோட்டையன் காரணம் என, இ.பி.எஸ்., குற்றம்சாட்டியிருந்தார்.இதற்கு பதில் அளிக்கும் வகையில், செங்கோட்டையனின், ஈரோடு மாவட்டம், கோபி அருகே குள்ளம்பாளையம் பண்ணை வீட்டில் நேற்று கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் சிலர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அதன் விபரம்:ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு முன்னாள் துணை செயலர் மோகன்குமார்: மறைந்த எனது தந்தை சண்முகவேல், 2021ல், அந்தியூர் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்டார். அவர், 1,275 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். எனது தந்தை 1989ல் கட்சியில் இணைந்து, சிறப்பாக செயல்பட்டுள்ளார். 2016 சட்டசபை தேர்தலில், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜா, வேட்பாளராக அறிவித்த போது, எனது தந்தை டி.என்.,பாளையம் ஒன்றியம் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அதனால் அப்போது, 5,000 ஓட்டு வித்தியாசத்தில், அந்த தேர்தலில் ராஜா வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றதற்கு, என் தந்தை உறுதுணையாக இருந்தார்.சிறப்பாக செயல்பட்ட சண்முகவேலுக்கு, கடந்த தேர்தலில் போட்டியிட கட்சி தலைமை வாய்ப்பு கொடுத்தது. ஆனால், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜா, பல்வேறு கட்சி நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு, கட்சியின் வேட்பாளர் தோற்கடிக்கப்பட வேண்டும். இரட்டை இலை தோற்றால்தான், தனக்கு மீண்டும் மரியாதை கிடைக்கும் என பல நிர்வாகிகளை, அவர் தொடர்பு கொண்டு வற்புறுத்தியுள்ளார். அதில் விசுவாசமிக்க சில நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ., தங்களிடம் பேசியதை பதிவு செய்து, அதன் விபரங்களை கட்சியின் தலைமைக்கும் அனுப்பினர். இருப்பினும் ஒரு சில நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜாவுடன் இணைந்து துரோக செயல்களில் ஈடுபட்டனர்.முன்னாள் எம்.எல்.ஏ., ராஜா, துரோக செயல்களில் ஈடுபட்டதால் தான், கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் இரட்டை இலை சின்னத்துக்கு, துரோகத்தை விளைவித்த முன்னாள் எம்.எல்.ஏ., ராஜாவுக்கு மாநில பதவி கிடைத்துள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ., ராஜா, கட்சிக்கும், தலைமைக்கும் எதிராக, அவர் பேசிய பல ஆடியோ ஆதாரங்கள், இன்றும் நிர்வாகிகள் வைத்துள்ளனர். அதுகுறித்து பர்கூர் அ.தி.மு.க., முன்னாள் ஊராட்சி செயலர் ராயண்ணன் என்பவரிடம், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜா பேசிய ஆடியோ ஆதாரம் குறித்த பதிவை அவர் வெளியிடுவார்.இவ்வாறு கூறினார்பர்கூர் அ.தி.மு.க., முன்னாள் ஊராட்சி செயலர் ராயண்ணன்: கடந்த 2021 சட்டசபை தேர்தலில், அந்தியூர் தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளராக சண்முவேல் போட்டியிட்டார். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ., ராஜா என்னை அழைத்து, கட்சிக்கு எதிராக அவர் சில கருத்துகளை கூறினார். அதை நான் உள்வாங்கி, கட்சி பணி செய்ய சென்றேன். என்னிடம் அவர் மீண்டும் தொடர்பு கொண்டு, நான் என்ன சொல்கிறேனோ அதை கேட்டு நீ செயல்பட வேண்டும். அப்போது தான் தனக்கு நற்பெயர் கிடைக்கும் என என்னை வற்புறுத்தினார். அதை என் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது அவர் என்னிடம் பேசிய ஆடியோவை உங்கள் முன் போடுகிறேன் எனக்கூறி, அதன் ஆடியோ பதிவை வெளியிட்டார். பின் அவர் மேலும் கூறுகையில், கடந்த சட்டசபை தேர்தலின் போது, மாவட்ட செயலராக, பவானி எம்.எல்.ஏ., கருப்பணன் தான் பொறுப்பில் இருந்தார். ஆனால், அவர் தேர்தலின் போது, அந்தியூர் மற்றும் பர்கூர் வந்து தேர்தல் பணியாற்றவில்லை.இவ்வாறு கூறினார்.மாவட்ட மகளிர் அணி முன்னாள் துணை செயலாளர் தமிழ்செல்வி: கடந்த இரு நாட்களுக்கு முன், இ.பி.எஸ்., ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். 1987ல், எனது தந்தை பெரியசாமிக்கு அவர் வாய்ப்பு கொடுத்ததாக பேசியுள்ளார். எனது தந்தையின் விசுவாசத்தால், அந்தியூர் தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. எனது தந்தையை செங்கோட்டையன் தான் அறிமுகப்படுத்தினார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி