உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தனியாக வசித்த மூதாட்டி இறப்பு குறித்து விசாரணை

தனியாக வசித்த மூதாட்டி இறப்பு குறித்து விசாரணை

கோபி, கோபி அருகே நாமக்கல்பாளையத்தை சேர்ந்தவர் மாராயாள், 74. வயது முதிர்வால் வீட்டில் தனியார் வசிந்து வந்தார். இவரது கணவர் பழனிசாமி, 20 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவரின் மகள் திருமணமாகி கோவையில் குடும்பத்துடன் வசிக்கிறார். இந்நிலையில் மாராயாள் வாயில் நுரை வந்த நிலையில், வீட்டில் நேற்று மயங்கி கிடந்தார். தகவலறிந்த பேத்தி மகேஸ்வரி, மாராயாளை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். மாராயாள் இறந்து கிடந்த இடத்தில், பூச்சி மருத்து பாட்டில் மூடி திறந்த நிலையில் கிடந்தது தெரியவந்துள்ளது. இதனால் மாராயாள் பூச்சிமருந்து குடித்து இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்ற கோணத்தில், சிறுவலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !