உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கல்வி உதவித்தொகை பெற சாதனையாளருக்கு அழைப்பு

கல்வி உதவித்தொகை பெற சாதனையாளருக்கு அழைப்பு

ஈரோடு: இளம் சாதனையாளர்களுக்கு பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில், இதர பிற்படுத்தப்பட்டோர் - பி.சி., - எம்.பி.சி., - என்.டி.சி., - பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்கள் பயன் பெறலாம். பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மாணவர்க்ளின் விண்ணப்பங்களை கல்வி நிறுவனங்கள் சரி பார்த்து, வரும், 31க்குள் அனுப்ப வேண்டும். https://scholarships.gov.inஎன்ற தளத்தின் லிங்க்கு சென்று, ஓ.டி.பி., எண்ணை பெற்று பதிவு செய்து விண்ணப்பிக்கவும், புதுப்பிக்கவும் செய்யலாம். நடப்பாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும், 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் தங்கள் மொபைல் போனில் இருந்தே விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை