உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / திறன் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

திறன் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

ஈரோடு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், நான் முதல்வர் திட்டம் மூலம், மாநில அளவில் தமிழ்நாடு திறன் போட்டி நடத்த உள்ளது.மாணவ, மாணவியர், இளைஞர்களின் தொழில் திறனை கண்டறிந்து மேம்படுத்தி, தேசிய, உலகளாவிய போட்டிகளில் பங்கேற்க வழி செய்வது, நோக்கமாகும். 63 வகை திறன் பிரிவுகளில் பங்கேற்கலாம். தொழில் பயிற்சி, பாலிடெக்னிக், பொறியியல் மற்றும் தொழில் கல்வி நிறுவனங்கள் சார்ந்த மாணவர்களும், கைத்திறனில் ஆர்வமுள்ள இளைஞர்கள், வெவ்வேறு போட்டி துறைகளில் பங்கேற்கலாம்.உற்பத்தி மற்றும் பொறியியல், தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில் நுட்பம், கட்டுமானம் மற்றும் கட்டடம், போக்குவரத்து மற்றும் தளவாடங்கள், படைப்பாற்றல் கலைகள் மற்றும் நாகரிக ஆடை, சமூக மற்றும் தனிப்பட்ட சேவைகள் என பல தலைப்பில் பங்கேற்கலாம். கூடுதல் தகவல், விதிமுறைகள் குறித்தும், விண்ணப்பிக்கவும், naanmudhalvan.inல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை