உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்

ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், ஜாக்டோ - ஜியோ சார்பில் பெருந்திரள் முறையீட்டு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் விஜயமனோகரன், சரவணன், மதியழகன், வீராகார்த்திக், ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.கடந்த, 2003 ஏப்., 1க்கு பின் அரசு பணியில் சேர்ந்தோருக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும். இடைநிலை, முதுகலை, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.பல்வேறு துறையினருக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !