உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பள்ளத்தில் கவிழ்ந்த கார்; கர்நாடகா வியாபாரி சாவு

பள்ளத்தில் கவிழ்ந்த கார்; கர்நாடகா வியாபாரி சாவு

புன்செய்புளியம்பட்டி: கர்நாடக மாநிலம் கொள்ளேகால் தாலுகா, பி.ஜி.பாளையத்தை சேர்ந்த, 10 பேர் டவேரா காரில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பூண்டு வியாபாரத்தை முடித்துவிட்டு, மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர். புனித்குமார், 27, காரை ஓட்டினார். பவானிசாகர் அருகே கோடேபாளையம் பிரிவு முருகன் கோவில் அருகே நேற்று முன்தினம் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. இதில் மைக்கேல், 56, என்பவர் தலையில் காயமடைந்து சம்பவ இடத்தில் பலியானார். மற்றவர்கள் காயத்துடன் உயிர் தப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை