உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தமிழக கால்பந்து அணிக்கு கொங்கு கல்வி நிலைய மாணவர் தேர்வு

தமிழக கால்பந்து அணிக்கு கொங்கு கல்வி நிலைய மாணவர் தேர்வு

ஈரோடு, நீலகிரி மாவட்டம் குன்னுாரில், 19 வயதுக்குபட்ட மாணவிகளுக்கான கால்பந்து தேர்வு போட்டி நடந்தது. இதில் ஈரோடு ரங்கம்பாளையம், கொங்கு கல்வி நிலைய, பிளஸ் ௨ மாணவி பிரவினா தேர்வு பெற்றார். அடுத்த மாதம் மணிப்பூரில் நடக்கும் தேசிய போட்டியில் விளையாடுவார்.மயிலாடுதுறையில், 17 வயதுக்குட்பட்ட கால்பந்து தேர்வு போட்டியில், பள்ளியின் பிளஸ் ௧ மாணவி இலக்கியா தமிழக அணிக்கு தேர்வானார். திருச்சியில் நடந்த, 17 வயதுக்குட்பட்ட மாநில அளவிலான கால்பந்து தேர்வு போட்டியில் பிளஸ் ௧ மாணவர் ஆகாஷ், தமிழக அணிக்கு தேர்வானார். இவர்களை பள்ளி தலைவர் சின்னசாமி, செயலாளர் செல்வராஜ், பொருளாளர் குணசேகரன், மற்றும் உதவித்தலைவர்கள் சோமசுந்தரம், தெய்வசிகாமணி, இணை செயலாளர் மீனாட்சிசுந்தரம், இணை பொருளாளர் நாகராஜன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பாராட்டி வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை