கொங்கு பாலிடெக்னிக் செஸ் போட்டியில் முதலிடம்
பெருந்துறை, மாநில அளவில் பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையேயான செஸ் மற்றும் பூப்பந்தாட்ட போட்டி, கோவையில் நடந்தது.செஸ் போட்டியில் பத்து மண்டல அளவிலான மாணவர்கள், பூப்பந்தாட்ட போட்டியில் எட்டு மண்டல அளவிலான மாணவர்களும் கலந்து கொண்டனர். பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் மாணவர்கள், செஸ் போட்டியில் முதலிடம், பூப்பந்தாட்ட போட்டியில் மூன்றாமிடம் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், பயற்சி அளித்த உடற்கல்வி இயக்குநர்களை, கல்லுாரி தாளாளர் கார்த்திகேயன், கல்லுாரி முதல்வர் ராகவேந்திரன், துணை முதல்வர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்தினர்.