உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு ஜோர்

கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு ஜோர்

ஈரோடு:கிருஷ்ண ஜெயந்தி விழா ஈரோடு மாநகரில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கருங்கல்பாளையத்தில் உள்ள விஸ்வரூப சீரடி சாய்பாபா கோவிலில், மகா விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமாக கிருஷ்ணர் பிறந்தை நினைவு கூறும் வகையில், குழந்தை வடிவிலான கிருஷ்ணர் சிலையை ஊஞ்சலில் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக, 54 சீர்வரிசை தட்டுகளுடன் பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். பின் அபிஷேகம், ஆராதனையை தொடர்ந்து கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊஞ்சலில் அமர வைக்கப்பட்டார். இதையடுத்து பக்தர்கள் வரிசையாக சென்று கிருஷ்ணரின் புகழ்பாடும் பாடல்களை பாடியபடி ஊஞ்சலை ஆட்டி வழிபட்டனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் மாநகரில் பல்வேறு கோவில்களிலும் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !