உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குமுதா பள்ளி மாணவர்கள் பேச்சு போட்டியில் முதலிடம்

குமுதா பள்ளி மாணவர்கள் பேச்சு போட்டியில் முதலிடம்

ஈரோடு: காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு மெர்கன்டெல் வங்கி மற்றும் நாடார் மகாஜன சங்கம் சார்பில், ஈரோடு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நடந்தது. இதில், 200 க்கும் மேற்-பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மூன்று பிரிவுகளாக போட்டி நடந்தது.இதில் நம்பியூர் குமுதா மெட்ரிக் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவன் ரிஷிக் ஆர்யா, பிளஸ் ௨ மாணவி கவிதர்ஷினி ஆகியோர் தங்கள் பிரிவுகளில் முதலிடம் பிடித்து, 8,000 ரூபாய் பரிசுத்தொகை வென்றனர். இதன் மூலம் இருவரும் மாநில அளவில் விருதுநகரில் நடக்கும் போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற இருவரையும், பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி, பள்ளி செயலர் அரவிந்தன், இணை செயலர் மாலினி, விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, பள்ளி முதல்வர் மஞ்சுளா பாராட்டி வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை