உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மீது பாய்ந்தது குண்டாஸ்

மீது பாய்ந்தது குண்டாஸ்

ஈரோடு, அக். 23-சத்தியமங்கலம் அருகே, குமாரபாளையம், மலையடிபுதுார், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் வடிவேல், 44; சிறுமி பாலியல் பலாத்கார புகாரில், சத்தி அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டருக்கு எஸ்.பி., பரிந்துரைத்தனர். கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பரிந்துரையை ஏற்றதால், வடிவேல் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவு நகல், சிறையில் அவரிடம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !