உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தமிழில் பெயர் பலகை வையுங்க தொழிலாளர் துறை வலியுறுத்தல்

தமிழில் பெயர் பலகை வையுங்க தொழிலாளர் துறை வலியுறுத்தல்

ஈரோடு: ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவல-கத்தில், ஈரோடு மாவட்ட நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டு கூட்டம், உதவி ஆணையர் ஜெயலட்சுமி தலை-மையில் நடந்தது. எடையளவுகள், மின்னணு தராசுகள் முத்திரை இன்றி பயன்படுத்தக்கூடாது. பொட்டல பொருட்கள் அதிகப்பட்ச சில்லறை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதும், உரிய அறிவிப்பு இன்றி விற்பனை செய்யப்படுவதும் சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் சட்டமுறை எடையளவு பொட்டல பொருட்கள் விதிகளின்படி தண்டனைக்குரிய குற்றம்.ஆய்வின்போது முரண்பாடுகள் கண்டறியப்பட்டால், அபராத நட-வடிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும் அதே வளாகத்தில் நடந்த ஆட்சி மொழி சட்ட வாரவி-ழாவில், உதவி ஆணையர் ஜெயலட்சுமி பேசுகையில், ''தமிழில் பெயர் பலகை வைப்பது கட்டாயம். அரசு விதிகளின்படி தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்.அவ்வாறு வைக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என எச்சரிக்கை விடுத்தார். கூட்டத்தில் பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ