மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு
30-Mar-2026
சத்தியமங்கலம், சத்தியமங்கலத்தில் குடிபோதை பழக்கத்தால் தொழிலாளி உயிர் பறிபோனது.சத்தியமங்கலத்தை அடுத்த ராஜன் நகரை சேர்ந்தவர் அஜித்குமார், 28; பந்தல் போடும் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த சுஜி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அஜித்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனால் சுஜி அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் அஜித்குமார் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனாலும் தினமும் குடிபோதையில் வந்ததால், தந்தை ராஜன் நேற்று முன்தினம் இரவு கண்டித்துள்ளார். இதனால் படுக்கையறையில் துாக்கிட்டு கொண்டார். இதையறிந்த தந்தை, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து மகனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நேற்று இறந்தார். சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.
30-Mar-2026