மேலும் செய்திகள்
டிரைவருக்கு வலிப்புவிபத்தில் சிக்கிய கார்
04-Nov-2026
அந்தியூர்:அந்தியூரை அடுத்த தோப்பூர், குண்டுகலாம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 31; பனியன் நிறுவன தொழிலாளி. கருத்து வேறுபாட்டால் நான்கு ஆண்டுகளுக்கு முன், மனைவி விவாகரத்து பெற்று சென்று விட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் நேற்று பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். வீட்டில் மயங்கி கிடந்தவரை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
04-Nov-2026