உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அ.தி.மு.க., ஆட்சியில் பிரச்னைகளுக்கு தீர்வு; வழக்கறிஞர் வி.என்.எஸ்., உறுதி

அ.தி.மு.க., ஆட்சியில் பிரச்னைகளுக்கு தீர்வு; வழக்கறிஞர் வி.என்.எஸ்., உறுதி

அந்தியூர்: அந்தியூர் தொகுதியில் 'அந்தியூர் மக்கள் அ.தி.மு.க., பக்கம்' என்ற தலைப்பில், அ.தி.மு.க., பிரமுகர் வி.என்.எஸ்., என்கிற வக்கீல் வி.என்.சுப்பிர-மணியம், மக்களை சந்தித்து குறை கேட்டு உரையாடி வருகிறார். இவ்வகையில் அந்தியூர் அருகே மைக்கேல்பாளையம் ஊராட்சி கூடுமியானுாரில் குறை கேட்டார். அப்போது மக்கள் அவரிடம் கூறியதாவது: நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் இப்பகு-தியில், பொது கழிவறை இருந்தும் பயன்படாமல் இருப்பதால் மிகவும் அவதிப்படுகிறோம். ஊரிலிருந்து 2 கி.மீ., துாரம் வரை அந்தியூர் செல்லும் வழியில் ஒரு தெருவிளக்கு கூட இல்லை. எங்கள் பகுதியில் யாரேனும் இறந்தால், அந்தியூர் பெரிய ஏரியில் புதைப்பது வழக்கம். நீர் நிலைகளில் உடலை அடக்கம் செய்யக்-கூடாது என நீர் வளத்துறை கூறியுள்ளதால், உடலை புதைக்க வழியில்லாமல் தவிக்கிறோம். அரசு பஸ் போக்குவரத்து இல்லாததால், 2 கி.மீ., நடந்து சென்று பஸ்ஸூக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. எங்க-ளுக்கு கூட்டுறவு மூலம் வழங்கப்பட்ட வீட்டு மனை கடனை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர். இதைக் கேட்ட வக்கீல் வி.என்.எஸ்., 'அந்தியூர் தொகுதி மட்டுமின்றி, 2026 தேர்-தலில் தமிழகத்தில், 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும். அப்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும்' என்று உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ