உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வக்கீல்கள் விழிப்புணர்வு

வக்கீல்கள் விழிப்புணர்வு

அந்தியூர், அந்தியூரில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் சார்பில், சிறப்பு சமரச இயக்க விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் துவங்கிய பேரணியை நீதிபதி மதிவதினி வணங்காமுடி துவக்கி வைத்தார். பர்கூர் ரோடு வழியாக பத்ரகாளியம்மன் ரவுண்டானா வரை சென்ற பேரணி, மீண்டும் நீதிமன்றத்தை அடைந்தது.பேரணியில் மாணவ, மாணவியர் சமரச இயக்க விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். வழி நெடுக சமரச விழிப்புணர்வு நோட்டீஸ் மக்களுக்கு வழங்கப்பட்டது. வழக்கறிஞர் சங்க தலைவர் குணசேகரன், செயலாளர் விஜய் உட்பட, 30க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ