உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வக்கீல் பொதுக்குழு கூட்டம்

வக்கீல் பொதுக்குழு கூட்டம்

வக்கீல் பொதுக்குழு கூட்டம்கோபி, டிச. 22-தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் பொதுக்குழு கூட்டம் கோபியில் நேற்று நடந்தது. தலைவர் நந்தக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் பன்னீர்செல்வன், பொருளாளர் ரவி, கோபி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் காளத்திநாதன் பங்கேற்றனர். தமிழகத்தில் சமூக விரோதிகளால் வக்கீல்கள் தாக்கி, கொலை செய்தும், கொடுங்காயம் ஏற்பட்டு, உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை தடுக்கும் விதமாக, மத்திய, மாநில அரசுகள் வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். வழக்கறிஞர் சேமநலநிதியை, 25 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை