/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்காமல் மெத்தனம்:காஸ் குழாய் அமைக்கும் பணியால் வருத்தம்
உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்காமல் மெத்தனம்:காஸ் குழாய் அமைக்கும் பணியால் வருத்தம்
ஈரோடு:ஈரோடு மாநகராட்சி பகுதியில் வீடுகளுக்கு காஸ் குழாய் இணைப்பு வழங்கும் பணியை, தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதற்காக, 19வது வார்டு வீரப்பம்பாளையத்தில் காஸ் குழாய் அமைக்கும் பணி நடந்தது. அப்போது குடிநீர் குழாய் சேதமடைந்தது. குழாயை சீரமைக்காததால், அப்பகுதி மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:தீபாவளி பண்டிக்கைக்கு முன் காஸ் குழாய் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதற்காக குழி தோண்டியபோது சாலைக்கு அடியில் செல்லும் குடிநீர் குழாய் சேதமாகி தண்ணீர் வெளியேறியது. தண்ணீரை உறிஞ்சிய பிறகு பணியை தொடங்கினர். ஆனாலும் சரியாகாததால் பணியை பாதியிலேயே நிறுத்தி சென்று விட்டனர். ஒரு மாதத்துக்கு மேலாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.