உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எலுமிச்சம்பழம் கிலோ ரூ.250

எலுமிச்சம்பழம் கிலோ ரூ.250

ஈரோடு:கோடை காலமாக தற்போது இளநீர், பழரசங்களை வாங்க இயலாதவர்கள், ஜூஸ் போடுவதற்கு எலுமிச்சம்பழத்தை நாடுவது அதிகரித்துள்ளது. இதனால் கிராக்கி ஏற்பட்டு, எலுமிச்சம்பழம் விலையும் உயர தொடங்கியுள்ளது.இதுகுறித்து மொத்த வியாபாரிகள் கூறியதாவது:ஈரோடு தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் தென்காசி உள்ளிட்ட சில பகுதிகள், ஆந்திராவில் இருந்து எலுமிச்சம்பழம் வரத்தாகும். கோடை வெயிலால் தேவை அதிகரித்துள்ளது. சில வாரங்களுக்கு முன் முதல் ரக பழம் சில்லறை விற்பனையில் அதிகபட்சம், 5 ரூபாய், சிறிய அளவு பழம், 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை விற்றது. தற்போது விலை இருமடங்காகி உள்ளது.மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ, 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஒரு பழத்தின் விலை, 7 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்கிறது. மழைக்காலம் தொடங்கும் வரை விலை உயர்வு நீடிக்கும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி