மேலும் செய்திகள்
உள்ளூர் வர்த்தக செய்திகள்
15-Jun-2025
* ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று நடந்தது. சந்தைக்கு, 6,000 முதல், 23,000 ரூபாய் மதிப்பில், 50 கன்றுகள், 23,000 முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 150 எருமை மாடுகள், 20,000 முதல், 75,000 ரூபாய் மதிப்பில், 200 பசு மாடுகள், முற்றிலுமான கலப்பின மாடுகள் கொண்டு வரப்பட்டன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மாநில விவசாயிகள், வியாபாரிகள் கால்நடைகளை வாங்கி சென்றதால், 90 சதவீதம் விற்பனை நடந்தது.* சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 366 மூட்டை நிலக்கடலை விற்பனைக்கு வரத்தானது. ஒரு கிலோ, 66.66 முதல், 78.16 ரூபாய் வரை, 11,946 கிலோ நிலக்கடலை, 8.௭௭ லட்சம் ரூபாய்க்கு விலை போனது. இதேபோல் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 100 மூட்டை காய்ந்த நிலக்கடலை வரத்தானது. கிலோ, 72 ரூபாய் முதல் 79 ரூபாய் வரை விற்றது.* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. கதளி கிலோ, 58 ரூபாய், நேந்திரன், 42 ரூபாய்க்கும் விற்பனையானது. செவ்வாழை தார், 980 ரூபாய், தேன்வாழை, 780, பூவன், 850, ரஸ்த்தாளி, 740, மொந்தன், 560, ரொபஸ்டா, 490, பச்சைநாடான், 560 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 5,062 வாழைத்தார், 10.60 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.* சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகை ஒரு கிலோ மல்லிகை பூ, 760 ரூபாய்க்கு ரூபாய்க்கு ஏலம் போனது. இதேபோல் முல்லை-280, காக்கடா-225, செண்டுமல்லி- 30, கோழிக்கொண்டை-70, ஜாதிமுல்லை-600, கனகாம்பரம்- 420, சம்பங்கி-15, அரளி-40, துளசி-50, செவ்வந்தி-180 ரூபாய்க்கும் விற்பனையானது.* தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு, 35 மூட்டை வரத்தானது. ஒரு கிலே அதிகபட்சம், 23௫ ரூபாய், குறைந்தபட்சம், 204.55 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம், 17.30 குவிண்டால் தேங்காய் பருப்பு, 3.87 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.திங்கள், புதனில் பருத்தி ஏலம்அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வரும், 23ம் தேதி முதல் திங்கள்கிழமை தோறும் மாசிப்பட்ட பருத்தி ஏலம் தொடங்க வுள்ளது. விவசாயிகள் நன்கு முதிர்ந்த, மலர்ந்த, வெடித்த பருத்தியை அதிகாலை நேரத்தில் பறித்து, நிழலில் உலர்த்த வேண்டும். பிறகு துாசு, சருகுகளை நீக்கி ரகம் வாரியாக தனித்தனியே பிரித்து ஏலத்துக்கு கொண்டு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் பூதப்பாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், வரும், ௨௫ம் தேதி முதல் புதன்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
15-Jun-2025