உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்

* ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 1.14 லட்சம் தேங்காய் வரத்தானது. கருப்பு தேங்காய் கிலோ, 56.97 முதல், 66.99 ரூபாய்; பச்சை தேங்காய், 54.04 முதல், 62.19 ரூபாய்; வரக்காய், 97.19 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 46,648 கிலோ தேங்காய், 29.௧௦ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.* சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகை பூ கிலோ, 1,320 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை-680, காக்கடா-750, செண்டுமல்லி-160, கோழிக்கொண்டை-205, ஜாதிமுல்லை-750, கனகாம்பரம்-1,300, சம்பங்கி-240, அரளி-340, துளசி-60, செவ்வந்தி பூ-280 ரூபாய்க்கும் விற்பனையானது.* கோபி தாலுகா, சிறுவலுார் அருகே பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில், கருப்பட்டி ஏலம் நேற்று நடந்தது. தென்னங்கருப்பட்டி, ௧,௦௦௦ கிலோ வரத்தாகி, கிலோ 120 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் கிலோவுக்கு பத்து ரூபாய் விலை கூடியது. வரத்தான அனைத்தும், 1.20 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. * கொடுமுடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 20,598 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ, 52.15 முதல், 62.89 ரூபாய் வரை, 7,318 கிலோ தேங்காய், 4.௪௪ லட்சம் ரூபாய்க்கு விலை போனது. கொப்பரை தேங்காய், 476 மூட்டை வரத்தானது. முதல் தரம் கிலோ, 215.55 முதல், 219.69 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 164.88 முதல், 215.55 ரூபாய் வரை, 21,067 கிலோ கொப்பரை, 44.௪௧ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. * திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நேற்று நடந்த ஏலத்துக்கு, 990 கிலோ தேங்காய் பருப்பு வரத்தானது. ஒரு கிலோ அதிகபட்சம், 201.10 ரூபாய், குறைந்தபட்சம், 150.30 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம் மூன்று லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி