உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உள்ளாட்சி தொழிலாளர் ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு

உள்ளாட்சி தொழிலாளர் ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு

ஈரோடு ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்., மற்றும் பஞ்.,களில் பணிபுரியும் துாய்மை பணியளர், துாய்மை காவலர், ஓட்டுனர், குடிநீர் வினியோக பணியாளர் உட்பட உள்ளாட்சி தொழிலாளர் கோரிக்கை மாநாடு நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி., மாநில செயலர் சின்னசாமி தலைமை வகித்தார். சம்மேளன மாநில செயலர் மணியன் வரவேற்றார். எம்.பி., சுப்பராயன் மாநாட்டை துவக்கி வைத்தார். மாநில பொது செயலர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பேசினர்.ஈரோடு மாவட்டத்தில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில், 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்கின்றனர். இவர்களில், 80 சதவீதம் பேர் அவுட் சோர்சிங் பெயரில் தினக்கூலி தொழிலாளர்களாக பல ஆண்டாக பணி செய்கின்றனர். இவர்களுக்கு அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியம் வழங்கப்படுவதில்லை. பி.எப்., - ஈ.எஸ்.ஐ., உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள் செயல்படுத்துவதில்லை. அனைத்து நிலைகளிலும் ஒப்பந்த தொழிலாளர் முறையை ரத்து செய்து, நிரந்தர பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பது உள்பட தீர்மானம் நிறைவேற்றினர். இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும், 8ல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை