தாராபுரத்தில் லோக் அதாலத் 330 வழக்குகளுக்கு தீர்வு
தாராபுரம்:தாராபுரத்தில் லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதி-மன்றம் நேற்று நடந்துத. மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சரவணன் தலைமை வகித்தார். சார்பு நீதிபதி சக்திவேல், உரிமை-யியல் நீதிபதி பாண்டி மகாராஜா மற்றும் குற்றவியல் நடுவர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தனர். இதில், 49 வாகன விபத்து வழக்கு, 197 குற்றவியல் சிறு வழக்கு, 62 உரிமையியல் வழக்கு உள்பட, 330 வழக்குகளுக்கு, 17.12 கோடி ரூபாய் மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டது. இது தவிர, 14 வங்கி வாராக்கடன் வழக்கு களுக்கும் கிடைத்தது.