மேலும் செய்திகள்
வரட்டுப்பள்ளத்தில்சிறுத்தை நடமாட்டம்
23-Apr-2025
அந்தியூர்: ஆந்திர மாநிலம் விஜயநகரிலிருந்து மதுரைக்கு பெயின்ட் ஏற்றிய லாரி, ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பாதை வழியாக வந்தது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூ-ரணி, பெரியநாயகிபுரத்தை சேர்ந்த சையது ஷேக் முகைதீன், 50, ஓட்டி வந்தார். பர்கூர் மலை வழியாக வரட்டுப்பள்ளம் அணை 'வியூ' பாயின்ட் அருகே நேற்று காலை வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி இடதுபக்கம் கவிழ்ந்தது. இதில் டிரைவர், கிளீனர் காளிதாசன், 34, சிராய்ப்பு காயத்துடன் தப்-பினர். பர்கூர் போலீசார் லாரியை அப்புறப்படுத்தினர்.
23-Apr-2025