ரேஷன் கடைகளுக்கு மெஷின்
தாராபுரம், தாராபுரத்தில் ரேஷன் கடைகளுக்கு, ப்ளூடூத் உடன் கூடிய எடை இயந்திரம் வழங்கும் பணி தொடங்கியது. தாராபுரம் வட்டத்தில், 58 பகுதி நேர கடைகள் உள்பட, 176 ரேஷன் கடைகள் இயங்குகின்றன. இந்த கடைகளுக்கு, ப்ளூ டூத் இயந்திரத்துடன் கூடிய எடை போடும் கருவிகள் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் விற்பனையாளர்கள் தங்கள் கடைகளுக்கான இயந்திரங்களை வாகனங்களில் ஏற்றி சென்றனர். இதில் துல்லியமாக எடை போட்டால் மட்டுமே, பில் வெளிவரும் என கூறப்படுகிறது.