உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / லாரியில் பேட்டரி திருடியவர் கைது

லாரியில் பேட்டரி திருடியவர் கைது

பவானிசாகர்;பவானிசாகரை அடுத்த தொப்பம்பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் கோபிநாத், 31; இவருக்கு சொந்தமான லாரியை வீட்டு முன்பு நிறுத்துவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் நிறுத்தியிருந்தார். நேற்று காலை பார்த்தபோது லாரியில் இருந்த இரு பேட்டரி மாயமாகி இருந்தது. அவர் புகாரின்படி பவானிசாகர் போலீசார் விசாரித்தனர். இதில் பவானிசாகர் கணபதி நகர் கட்டட தொழிலாளி சக்திவேல், 25, திருடியது தெரிய வந்தது. அவரை கைது செய்து, பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ