மேலும் செய்திகள்
தொடர் செயின் பறிப்பு சென்னை இளைஞர் கைது
27-May-2025
டி.என்.பாளையம்,பங்களாபுதுார் அருகே திருமலை நகரில் மளிகை கடை நடத்தி வருபவர் ராசம்மாள், 62; சில நாட்களுக்கு முன் ஹெல்மெட் அணிந்தபடி கடையில் பொருட்கள் வாங்க வந்த மர்ம நபர், ராசம்மாள் தாலிக்கொடியை பறிக்க முயன்றார். கொடி அறுந்ததால் தங்க குண்டுகளை மட்டும் பறித்துக்கொண்டு ஆசாமி பைக்கில் ஏறி தப்பி சென்றார். பங்களாபுதுார் போலீசார் களவாணியை தேடி வந்தனர். இது தொடர்பாக திருப்பத்துார், கந்திலியை சேர்ந்த சிவப்பிரகாசம், 35, என்பவரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
27-May-2025