பெண்ணிடம் நகை பறித்து ஓடியவர் கைது
ஈரோடு, டிச. 4-ஈரோடு, மாணிக்கம்பாளையம், கிருபா நகர் சக்தி இல்லத்தை சேர்ந்த ஆறுமுகம் மனைவி பரிமளா, 50; ஈரோடு-பெருந்துறை சாலை நியூ டீச்சர்ஸ் காலனி அருகே நேற்று காலை நடந்து சென்றார்.அப்போது பின்னால் வந்த ஒருவர், பரிமளா அணிந்திருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு ஓடினார். பரிமளா சத்தமிடவே அப்பகுதியினர் ஆசாமியை பிடித்து, வீரப்பன்சத்திரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் ஈரோடு, கனிராவுத்தர் குளம், வேலன் நகரை சேர்ந்த வேன் டிரைவர் லட்சுமணன், 44, என தெரிந்தது. அவரை கைது செய்தனர்.