உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நான்கு கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது

நான்கு கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது

கோபி, கோபி அருகே, நான்கு கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த வாலிபரை, கோபி மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.கோபி மதுவிலக்கு பிரிவு போலீசார், புளியம்பட்டி அருகே கோவை சாலையில், நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்றிருந்த, திருப்பூர் மாவட்டம், தொட்டிபாளையத்தை சேர்ந்த மணிகண்டன், 28, என்பவரை விசாரித்தபோது, அவர் விற்பனைக்காக நான்கு கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை, கோபி மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ