மேலும் செய்திகள்
டீக்கடையில் மயங்கிய லிப்ட் மெக்கானிக் சாவு
08-May-2026
ஈரோடு::ஈரோடு எலக்ட்ரிக்கல் லோகோ ஷெட் அருகே நேற்று காலை, 7:00 மணியளவில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், ரயிலில் அடிபட்டு உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக, ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். காக்கி கலர் பேண்ட், மஞ்சள்-புளூ-ரோஸ் கலர் சட்டை அணிந்திருந்தார். இரு கால்களும் சிதைந்து விட்டன. நெஞ்சின் வலப்பக்கத்தில் தழும்பு, வயிற்றின் இடது பகுதியில் மச்சம் காணப்பட்டது. இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
08-May-2026