உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மது போதையில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு

மது போதையில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு

ஈரோடு:ஈரோடு கருங்கல்பாளையம் குமணன் வீதியை சேர்ந்தவர் ஜீவா, 44, தொழிலாளி. இவருக்கு பிரியதர்ஷினி என்ற மனைவி, 2 மகள்கள் உள்ளனர். ஜீவாவுக்கு மது பழக்கம் இருப்பதால், அவரது மனைவி, 7 ஆண்டுக்கு முன் மகள்களுடன் பிரிந்து சென்று விட்டார். கடந்த, 20ல் வீட்டில் அதிக மதுபோதையில் கீழே விழுந்து மயக்க நிலையில் இருந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஜீவா உயிரிழந்தார். கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை