உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புளிய மரத்தில் ஆட்டோ மோதி லோடுமேன் பலி

புளிய மரத்தில் ஆட்டோ மோதி லோடுமேன் பலி

காங்கேயம்: கோவை மாவட்டம், சோமனுார் வேலையுத்தம்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 21, தோஸ்த் ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் மாலை, வெள்ளகோவிலில் இருந்து நுால் கோன் பைகளை ஏற்றிக்கொண்டு, திருப்பூருக்கு காங்கேயம் வழி-யாக சென்றார். படியூர் அருகே சென்றபோது, ஆட்டோ குறுக்கே நாய் வந்துள்ளது. ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து, சாலை-யோரம் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் மணிகண்ட-னுடன் வந்த, அவரது ஊரை சேர்ந்த லோடுமேன் ஆதித்யா, 22, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காங்கேயம் போலீசார் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி