கருங்கல்பாளையம் பிரதான சாலையில் 2வது முறையாக மேன் ஹோல் சேதம்
ஈரோடு, ஈரோட்டில் கருங்கல்பாளையம் பிரதான சாலையில், உணவகம், மருந்து கடைகள், பேக்கரி கடை என பல்வேறு வணிக கடைகள் மற்றும் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இங்குள்ள கழிவு பாதாள சாக்கடை மூலம் வெளியேற்றப்படுகிறது.இதில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்வதற்காக மேன் ஹோலும் சாலை நடுவில் உள்ளது. சேதமான மேன் ஹோல்களை சீரமைக்கும் பணி சமீபத்தில் நடந்தது. பணி முடிந்து கான்கிரீட் பூச்சு மேற்கொள்ள வேண்டும். இதனால் அந்த இடத்தில் பேரிகார்டு வைத்தனர். இந்நிலையில் பேரிகார்டுகளை அகற்றி சென்ற வாகனங்களால் மேன் ஹோல் உடைந்து விட்டது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: இவ்வழியாக செல்லும் பஸ் டிரைவர்களே இதற்கு காரணம். மாற்றுப்பாதையை பயன்படுத்தாமல் பேரிகார்டுகளை தள்ளி வைத்து சென்றனர். இதனால் இரண்டாவது முறையாக மேன்ஹோல் உடைந்துள்ளது. எனவே பாதையில் போக்குவரத்துக்கு முற்றிலும் தடைவிதித்து பணி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினர்.