உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெருந்துறை அரசு பள்ளிக்கு மஞ்சப்பை விருது

பெருந்துறை அரசு பள்ளிக்கு மஞ்சப்பை விருது

பெருந்துறை, பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக, மாநில அளவில் சிறந்த பள்ளிக்கான மஞ்சப்பை விருது கிடைத்துள்ளது.பள்ளி, கல்லுாரி அளவில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப்பை தவிர்த்தல், அதற்கு பதிலாக மாற்று பொருள் பயன்படுத்துதல், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி நடத்தி நெகிழிப்பை ஒழிக்க மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வகுப்புகளில் நெகிழி பொருட்களுக்கு பதிலாக மண்பானை, இரும்பு அளவுகோல், மை பேனா, சில்வர் தண்ணீர் பாட்டில், துணிப்பை பொருட்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட செயல்பாட்டுககாக, தமிழகத்தில் மூன்று கல்லுாரி மற்றும் மூன்று பள்ளிகளை தேர்வு செய்து மஞ்சப்பை விருது வழங்கப்பட்டது. இதில் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு, விருதுடன் மூன்று லட்சம் ரொக்கப்பரிசு வழங்கி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பெருமைப்படுத்தியுள்ளது.இதற்கான விருது வழங்கும் விழா, சென்னையில் அண்மையில் நடந்தது. தமிழக நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆகியோர், பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பிருந்தா ஸ்வீட்டி செல்வகுமாரி, வேளாண் ஆசிரியர் கந்தன் ஆகியோரை பாராட்டி மஞ்சப்பை விருது வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை