உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிப்பு

எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிப்பு

எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிப்புஈரோடு, டிச. 25--முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவு தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமையில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தென்னரசு, சிவசுப்பிரமணியம், நிர்வாகிகள் பழனிசாமி, மல்லிகா, ஜெகதீசன், கேசவமூர்த்தி, முருகானந்தம், ராமசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.* நம்பியூர் பஸ் ஸ்டாண்ட் முன் எம்ஜிஆரின் உருவப்படத்துக்கு, ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் தம்பி சுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி மரியாதை செலுத்தினர். பிலியம்பாளையத்தில் எம்ஜிஆர் சிலைக்கு எலத்துார் பேரூராட்சி செயலாளர்கள் கருப்பணன், சேரன் சரவணன், ஊராட்சி தலைவர்கள் மணிகண்டமூர்த்தி, பழனிச்சாமி மரியாதை செலுத்தினர். இதேபோல் டி.என்.பாளையம் அண்ணா சிலை முன் எம்.ஜி.ஆர்., போட்டோவுக்கு, வாணிப்புத்துார் செயலாளர் ரமேஷ் தலைமையிலான அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்.* கோபியில் எம்.ஜி.ஆர்., சிலைக்கு, எம்.எல்.ஏ., செங்கோட்டையன் தலைமையில் மரியாதை செலுத்தினர். நகர செயலாளர் பிரினியோ கணேஷ், சேர்மன் மவுதீஸ்வரன், ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.* அந்தியூரில் தவிட்டுப்பாளையம் மார்க்கெட்டில், எம்.ஜி.ஆர்., போட்டோவுக்கு, நகர செயலாளர் மீனாட்சி சுந்தரம் உட்பட கட்சியினர் மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி